பிராணாயாம விதிமுறைகள்

1. காலம் : அதிகாலை வெறும் வயிற்றிலும், மாலை நேரம், உணவுஉண்டு4 மணிநேரம் கழிந்து இருக்கவேண்டும். பிராணாயாமம் முடித்து 1/2 மணி நேரம் சென்றபின்தான் சாப்பிடவோ, நீர் அருந்தவோ வேண்டும்.

2. இடம் : தூய, அமைதியான, நல்ல காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும் திறந்தவெளியில் பிராணாயாமம் செய்யக்கூடாது. வெறுந்தரையில் அமரக்கூடாது, தரை விரிப்பின் மீது அமர்ந்துதான் செய்ய வேண்டும். வீட்டில் செய்யும்போது மின்விசிறியை நிறுத்திவிடவேண்டும். ஜன்னல் கதவுகள் திறந்திருக்க வேண்டும்.

3. ஆடை : தூய்மையான பருத்தி ஆடை தளர்வானதாக இருக்க வேண்டும்.

4. வயது : 12 வயதிற்கு மேல் அனைவரும் பிராணாயாம் செய்யலாம்.

5. பெண்கள் : கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்திற்கு நாடி சுத்தி மட்டும் செய்தல் நலம். பிறகு குரு ஆலோசனைபடி நடக்கவும். மாதவிடாய் நாட்களில் பிராணாயாமம் தவிர்க்கவும்.

6. இதயநோய் உள்ளவர்கள் குரு உதவியுடன் நாடிசுத்தி தவிர வேறெதுவும் செய்யக்கூடாது.

7. உணவு : சத்தான சாத்வீக உணவு (சைவம்), ஏற்றது பிராணாயமம் ஆரம்பிக்கும் முன் 1/2 டம்லர் நீர்பருகலாம், முடித்தபின்பு 1/2 மணி நேரம் சென்ற பின் நீர் பானங்கள் பருகலாம்.

8. பார்வை : கண்களை முடியே பிராணாயமம் செய்வது நலம்.

9. மனம் : பயிற்சியின் போது மனதை ஒருநிலைப்படுத்தி பின் பிராணாயாமம் செய்தால் முழுப்பலன்கிட்டும்.

10. உடலைத் தயார் படுத்துதல் : பிராணாயாமம் செய்யும் முன்பு இடதுகையை சற்று மேல்தூக்கி முன்பக்கமாக ஏற்றி பின் கீழே இறக்கி இயல்பு நிலைக்கு வந்து ஆரம்பிக்கவேண்டும். இது இருதயத்திற்கும், முளைக்கும் நாம்கொடுக்கும் சமிக்சை (சிக்னல்) ஆகும்.

11. திசைகள் : காலையில் கிழக்கு முகாமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும், இரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.30 வரை வடக்கு முகமாகவும் செய்தல் நன்று. தென் திசை பிராணாயமம் செய்ய ஏற்ற திசை அல்ல.

12. நேரம் : அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை செய்வது உத்தமம், மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை செய்வது உத்தமம்.

13. திதி நாட்கள் : அமாவாசை, பௌர்ணமி நாட்களில் நடு இரவில் வடக்குமுகம் அமர்ந்து செய்வது நல்ல பலன் தரும். (நடு இரவு 12 மணி முதல் 1.30 மணி வரை)
கிரகண நாட்கள் தவிர்க்க வேண்டும். நல்ல ஓசோன் 03. ஆக்ஸிஜன் காற்று நிறைந்துள்ள நேரங்களை அறிந்து அந்நேரம் செய்தால் நல்ல பலன் உண்டாகும்.