தசவாயுக்கள்

உடலில் உள்ள 10 வாயுக்களும் அலைகளின் வேலைகளும் பின்வறுமாறு 1. பிராணன் 2. அபானன் 3. வியானன் 4. உதானன் 5. சமானன் 6. நாகன் 7. கூர்மன் 8. கிருகரன் 9. தேவதத்தன் 10. தனஞ்செயன் இந்த தச வாயுக்களும் மிக முக்கியமான உடல் அங்கங்களையும் உடலின் பஞ்சபூத உறுப்புகளாகிய இராஜ உறுப்புகளையும் ஆட்சி புரிகின்றன.

1. பிராணவாயு:- நெஞ்சுக்குழியில் இருந்து மேல் நோக்கிச் சஞ்சரித்து, பரி, தாகத்தை ஏற்படுத்தி உணவை ஜீரணம் செய்து, செரிமானத்திற்கு மூல காரணமாக விளங்குகிறது

2. அபானன் :- உடற்கழிவுகளான மல, சலம் சுக்கிலம், சுரோணிதம், ஆகியவற்றை வெளியேற்றுவது. அதாவது உடலின் தள்ளல் என்ற தத்து வத்தின் அதிபதியாக
விளங்கும்.

3. வியானன் :- உடல் முழுவதும் வியாப்பித்து தொடு உணர்ச்சியை கிரகிப்பதோடு, ஜீரணமான உணவை இரசம் வேறாகவும் சக்கை வேறாகவும் பிரிக்கும் பணியைச் செய்வது.

4. உதாணன் : - தொண்டையில் இருந்து கொண்டு உணவை விழுங்கச்செய்து, ஏப்பம், வரச்செய்வது குறட்டை வரச்செய்வது உறங்கும் போது ஐம்புலன்களையும் இருளில் ஆழ்த்தி உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதும் பின்பு விழிப்பு நிலையில் அதனதன் இயல்பிற்கேற்ப மறுபடியும் இயங்கச் செய்வதும் ஆகும்.

5. சமானன் :- தொப்புள் பகுதியிலிருந்து கொண்டு உதானன் அனுப்பும் உணவின் சாரத்தை யெல்லாம் எல்லா உறுப்புகளுக்கும், அதனதன் இயல்பிற்கேற்ப பகிர்ந்து அளிப்பது.

6. நாகன் :- இது தொண்டையிலிருந்து கொண்டு வாந்தி, முக்கல், திமிர்விடுதல், ஆகியவைகளைச் செய்வதோடு கண்களுக்குப் பார்வையை கொடுப்பது.

7. கூர்மன் :- கண்இமைகளை இயக்குதல், உடல் சிலிர்த்தல் சிரிப்பு போன்ற
வேலைகளைச் செய்வது.

8. கிருகரன் :- தும்மல், அழுகை போன்ற உணர்ச்சிகளின் அதிபதியாக செயல்படுவது.

9. தேவதத்தன் :- மார்பில் சஞ்சரித்து கபத்தைக் கட்டி கொட்டாவி விக்கலை உண்டாக்குவது.

10. தனஞ் செயன் :- மேற்சொன்ன ஒன்பது வாயுக்களிலும் பரவியிருந்து விரவிக் கொண்டு நொடிக்கு 224 அதிர்வு அலைகளை உண்டாக்கி ஒவ்வொரு வாயுவையும்
அதனதன் தொழிலை செய்யவைப்ப தோடு 72,000 நாடி நரம்புகளையும் இயக்குவது, கர்ப்ப காலத்தில் இவ்வாயு குறையுமானால் பிறக்கும் குழந்தை கூன், குருடு, செவிடு, பேடு, முடம் மற்றும் தொழுநோய்- இவைகளை ஏற்படுத்தும். கர்பத்திலுள்ள கருவை
வெளியே தள்ளுவதும் இவ்வாயுவின் பணியே. மனிதன் இறக்கும் போது ஒன்று முதல் ஒன்பது வாயுவும் ஒன்றன்பின் ஒன்றாக உடல் விட்டு வெளியேறும். ஆனால் தனஞ்செயன் மட்டும் உடலில் தங்கி இருந்து வினாடிக்கு 224 மின் அதிர்வை உண்டாக்கி கொண்டே இருக்கும் அவற்றை கிரகிக்க இதர வாயுக்கள் இல்லாத படியால் இந்த மின் அதிர்வுகள் உள் உறுப்புகளை நேரடியாகத் தாக்கி வீங்கச் செய்யும். இறுதியில் வயிறு வெடித்து பின்னே தனஞ்செயன் வெளியேறிச் செல்லும் என திருமந்திரத்தின் பாடல்களான 653, 656, 863 இவைகள் தெரிவிக்கின்றன.