பிராணாயாமம் ஒரு பார்வை

பிராணாயாமம் உடலின் நோயைக் குணப்படுத்தும் உடலை கல்பம் ஆக்கும் அறிவை ( சித்தத்தை) அஜயா என்ற ஒடுக்க நிலைக்கு கொண்டுபோகும் இதனால் சிற்றறிவு பேறறிவு என்ற நிலைக்கு உயர்த்தப்படுகிறது.

உணர்வே பிரம்மம் உயிரே கடவுள் அறிவே சற்குரு உடலே மருத்துவர் என்பதே சித்தர்களின் சித்தாந்தம்.

சித்தர்கள் என்பவர்கள் அக்காலத்தில் நம்முடன் வாழ்ந்து விஞ்ஞானம் மெய்ஞானம் ஒருங்கே கைவரப் பெற்றவர்கள். மேலும் வானசாத்திரம் சோதிடம், போன்ற கலைகளில் வித்தகர்கள் ஆவார்கள்.

பொய் என்று சொல்லக்கூடிய இந்த தேகத்தை மெய் என்று நிருபித்துக் காட்டியவர்கள் காற்றைப் பிடித்து மூலக்கனலை எழுப்பி, மெய் ஞான அமுது உண்டு நரை, திரை, மூப்பு, பிணி, முதலியவற்றை வென்று வாழ்ந்து காட்டியவர்கள் ஆவர்.

மேலும் அட்டமாசித்துகள் என்ற எட்டுவித சித்துகளும் கைகூடப் பெற்றவர்கள். சித்என்றால் அறிவு என்று பொருள் படும் உடலின் 96 தத்துவங்களையும், அறிந்த அறிஞர்கள் சித்தர்கள்.

பிராணாயாமம் என்றகலை இயற்கையின் சட்ட நியதியாரும். பிராணாயாமம் பயில்வோர்கள் இயற்கையின் சட்டத்தை உணர்ந்து நடப்பவர்களாக திகழ்வார்கள்.

உனது பள்ளிவாசல் மூக்கின் நுனியாக இருக்கட்டும். உனது கல்லூரி உனது உடலாக இருக்கட்டும், உனது பட்டப்படிப்பு, மொழி உனது உடல் உணர்வாக இருக்கட்டும், இந்த பள்ளியில் பயிலாமல் வேறு எந்தப்பள்ளியில் பயின்றாலும் சிறந்த மனிதனாக திகழ முடியாது.

மனித உடல் பிராண வாயுவை உள் இழுத்து கரியமில வாயுவை வெளியே விடுகின்றது. இதுவே சுவாசம் எனப்படுவது. சுவாசிக்காமல் உலகில் எந்த ஜீவனாலும் உயிர் வாழமுடியாது. மனித உடல் உறுப்புகள் செவ்வனே இயங்க வேண்டுமானால், சுவாசமானது தங்கு தடை இன்றியும் இயல்பாகவும் நடைபெற வேண்டும். இன்றைய
கால கட்டத்தில் காற்றில் மாசுகள் அதிகரித்ததின் காரணமாக இந்த இயல்பான சுவாசம் நடைபெறுவது சற்று கடினமானதாகிப் போய்விட்டது இதன் காரணமாக மனித இனம் பல இன்னல்களுக்கு ஆளானதுடன் நோய் தொற்று ஏற்பட்டு பல மீளாத் துயரில் வாழ்ந்து வருகிறது. இந்த துயர்களில் இருந்து மீண்டிடவே பன்னெடுங்காலத்துக்கு முன்னரே நமது முன்னோர்களான சித்தர்கள் இந்த பிராணாயாமக் கலையை உலகு உய்ய நன் கொடையாக வழங்கினார்கள்.

குறிப்பாக பதிணென் சித்தர்கள் எனப்படும் மூலசித்தர்கள் இந்த பிராணாயாமம் செய்தே அனேக நன்மைகளைப் பெற்று தாம் பெற்ற அந்த இன்பத்தை இந்த உலகும் உய்திட பிராணாயாமக்கலையை குறிப்பிட்டு தந்துள்ளனர். பிற்காலத்தில் தோன்றிய பல்லாயிரக்
கணக்கான சித்தர்களும் அதனைப்பின்பற்றி போற்றி வளர்த்து வந்துள்ளனர், இந்த பிராணாயாமக்கலை என்பது சித்தர்கள் உலகுக்கு வழங்கிய சஞ்சீவி என்றால் மிகை ஆகாது.

பிராணாயாமம் என்றால் மூச்சுப் பயிற்சி என எண்ண வேண்டாம் நம்மைச் சுற்றி நிறைந்துள்ள பேறியக்க மண்டலத்தின் சக்திகள் காற்று என்ற மூலகத்தில் காந்தக் கலவையாகக் கலந்துள்ளது இந்த பேறியக்க காந்த கலலையின் சத்துகளை சுவாசக் கலையின் மூலம் உடலுக்குத் தேவையான அளவு உடலானது உள்வாங்கி நிறுத்தி உள் உறுப்புகளால் கிரகித்து பின் அவைகளை வெளியேற்றும். பலவித யுக்திகளின் அறிவே பிராணாயாமக் கலையாகும்.

அட்டாங்க யோகத்தில் இதனை பதஞ்சலி முனிவர் நான்காவது அத்யாயத்தில் அமைத்துள்ளார். மனித உடல் செம்மையாக இயங்க மனித உடலில் 108 இடங்களில்
உயிர்க்காற்று நின்று இயங்குகின்றது இதுவே உயிர்நிலை ஓட்டம் என அழைக்கப்படுகிறது மனித உடலில் உள்ள 10 வாயுக்கள் மேற்சொன்ன 108 மையங்களில் உள்ள உயிர்க்காற்றை இயக்குவதாக சித்தர்கள் கண்டு பிடித்துள்ளனர். சித்தர்களின் கணக்குப்படி முன்சொன்ன 108 இடங்களில் உள்ள அகப்பிராணனை இந்த தச வாயுக்களும் எவ்வாறு இயக்குகின்றது என்பதே பிராணாயாமத்தின் உட்பொருள்.

மனிதனின் கண்களுக்குப் புலப்படாத பொருட்கள் நான்கு 1. இறைநிலை, 2. மனிதனின் உயிர், 3. காற்று, 4. நோடீநு உடலில் தோன்றும் விதமும் தன்மையும், (நோடீநு நிலை) இவைகளை நாம் உணரத்தான் முடியும், ஏனெனில் இந்த நான்கும் சூட்சமமாக மனித தேகத்தை ஆட்சி செடீநுது வருகிறது. எனவேதான் சித்தர்கள் கண்ணால் காண முடியாத பிராணனை கொண்டு, உடலின் நோய்களைப் போக்கும் வழியினைக் கண்டு பிடித்தார்கள். இதுவே பிராணாயாமம் எனப்படுவது. இதுவே பிற்காலத்தில் பிராண சிகிச்சை என்று இயற்கை மருத்துவர்களால் பேணப்பட்டது.

இப்படிப்பட்ட அற்புத மருத்துவக் கலையை தமிழரின் அறிவுசார்ந்த சொத்தைப் போற்றிப் பாதுகாப்பது நமது கடமை. மேலும் நம் சந்ததியினர் பயன் அடைய நாம் பாடு பட வேண்டும். தமிழினம் அறிவியல் முன்னோடி என முத்திரை பதிக்கும் ஓர் அற்புதப் படைப்பு தான் சித்தர்களின் பிராணாயாமக்கலை இதனை அனுவாசி யோகம் என்றும் கூறுவர்.