நாடி சுத்தி

செயல்முறை

1. முதலில் சித்தாசனம், வஜ்ராசனம், பத்மாசனம் இதில் ஏதாவது ஒரு ஆசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.

2. வலக்கையை சின் முத்திரையுடன் வலது முழுங்காலில் வைத்துக்கொள்ளவும். இது சூரிய நாடியில் ஆரம்பிப்பவர்களுக்கு, பொதுவாக இடக்கையை சின்முத்திரையில் வைத்து இட முழுங்காலில் வைக்கச் சொல்வார்கள், இது சந்திர நாடியில் ரம்பிப்பவர்கள்
முறை. எனவே குருவின் சொற்படி இதை தேர்வு செய்திட வேண்டும்.

3. இடக்கையை நாசிகா முத்திரையில் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் விண்ணை நோக்கி ஆண்டிணா போன்று வைக்கவும்.

4. இடக்கை கட்டைவிரலை இடது மூக்கில் வைத்து இடது மூக்குத்துவாரத்தை அடைத்துக் கொள்ளவும். வலது மூக்குத்துவாரம் வழியாகக் காற்றை சீராக இழுக்கவும்.

5. பிறகு மூக்கை மோதிர விரலால் அடைத்துக் கொண்டு இடது மூக்குத்துவாரம் வழியாக காற்றை சீராக வெளியே விடவும். பிறகு அதே மூக்குத்துவாரம் வழியாகக்
காற்றை இழுத்து வலது மூக்கு துவாரம் வழியாக வெளிவிடவும்.

6. இது ஒரு சுற்று ஆகும். உள் இழுக்கும் மூச்சு நேரத்தைப் போல் வெளிவிடும் மூச்சு நேரம் சம நேரமாக இருக்குமாறு ஆரம்பகால பயிற்சியில் செய்வது நலம். பின்னர் குருவின் உபதேசப்படி சுவாசத்தை கூட்டியோ அல்லது குறைத்தோ எண்ணிக்கையை மாற்றிய மைத்துக் கொள்ளலாம். இது போன்று 5 முதல் 21 சுற்றுவரை செய்வது நலம்.

7. வைகறைப் பொழுதும், மாலை நேரமும் பயிற்சிக்கு உகந்த நேரம்.

நன்மைகள்
1. நாடிசுத்தி என்பது உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளையும் தூய்மை செய்ய வல்லது.
2. மூளை மற்றும் உடல் செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
3. கண் ஒளி பெருகும்.
4. ஜீரணசக்தி அதிகரிக்கும்.
5. உடல் பொதுவாக இலகுவாக, லேசாக இருப்பதாக உணர்வு வரும்.