உஜ்ஜயி - ( உஸ் என்ற ஒலியுடன் )
செயல் முறை
1. முதலில் சித்தாசனத்தில் தரை விரிப்பில் அமரவும்.
2. மூச்சை முழுவதுமாக வெளியேவிடவும், பிறகு இரு மூக்கு துவாரம் வழியாக மெல்ல மூச்சை உள் இழுக்கவும்.
3. உள்வரும் காற்றை மேல்வாய் அண்ணத்தினால் பாதிமூடி உணரும் வண்ணம் செய்து வரவும், உஸ் என்ற ஒலி தொண்டையில் உண்டாகும். கழுத்தை முன்புறம் வளைத்து ஜலபந்தம் செய்யவும்.
4. சிறிது நேரம் கழித்து தலைப்பகுதியை தளர்த்தி முச்சை வெளிவிடவும். இது ஒரு சுற்று ஆகும்.
5. இது போல 12 சுற்றுகள் செய்வது நலம்.
நன்மைகள்
1. தைராய்டு சுரப்பியை தூண்டுகிறது.
2. மூச்சுக் காற்று மண்டலம் சீராகிறது.
3. பிராணாயாமத்திற்கு தகுதியான சுவசா மண்டலத்தை உடலுக்குத் தருகிறது.