சிட்டாலி : - மூக்கு, நாக்கு, பிராணாயாமம்

செய்முறை

1. முதலில் சித்தாசனத்தில் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. கைகள் இரண்டையும் சின் முத்திரையில் முழங்கால் மேல் வைக்கவும்.
3. நாக்கின் ஒருபகுதி வாயின் வெளியே நீட்டி நீளவாக்கில் மடித்து நீண்ட குறுகலான குழாய்போல செய்யவும்.
4. மூச்சை, மடித்த நாக்கின் வழி உள் இழுத்து உட்புரத்தை ஈரக்காற்று குளிரவைப்பதை கவனிக்கவும். பிறகு நாக்கை உள் இழுத்து வாயை மூடவும்.
5. ஜலபந்தம் 5 வினாடி செய்தபின் இரண்டு மூக்குத்துவாரங்கள் வழியாக மூச்சை வெளியே விடவும். இருமூக்குத் துவாரங்களிலும் சூடான காற்று வெளியோறுவதை கவனிக்கவும்.
6. இதுபோல 6 முதல் 21 சுற்றுவரை செய்யலாம்.

நன்மைகள்
1. உடலுக்கு குளிர்சியைத் தரக்கூடியது.
2. தாகத்தைப் போக்கும்.
3. உடலில் உள்ள பித்த சுரப்பியை சீராக்கும்.