சித்தகாரி

நாக்கை கீழ்வளைத்துச் செய்யும் பிராணாயாமம்

செயல்முறை

1. முதலில் சித்தாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. வாயை சிறிது திறந்து நாக்கின் நுணியை முன் வரிசைப் பற்களைத் தொடுமாறு மடக்கிவைக்கவும்.
3. காற்றை வாயினால் உள்ளே இழுக்க வேண்டும். ஸ் ஸ் ஸ் என்ற சத்தம் உண்டாகும்.
4. ஜலபந்தம் செய்தபின்பு காற்றை இருமூக்குகள் வழியாக சீராக வெளியே விட வேண்டும்.
5. இதனை 6 முதல் 21 சுற்றுகள் வரை செய்யலாம்.

நம்மைகள்

1. வாயில் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.
2. உமிழ் நீர் சுரப்பிகள் கீழ், மேல் அண்ணச்சுரப்பிகளை சீர் செய்யும்.
3. நாவின் சுவை அரும்புகள் சீராகும்.
4. பசி, தாகம், சோம்பலை போக்கும்.
5. வாயில் நிகழும் முதல் ஜீரணத்தை சீராக்கும்.