சித்தர்கள் கூற்று - பாடல்களுடன்

ஏறுதல் பூரகம் ஈரெட்டுவாமத்தால்
ஆறுதல் கும்பகம் ஆறுபத்துநாலதில்
ஊறுதல் முப்பத்திரண்டதில் ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகமாமே - திருமந்திரம்

பிராணன் என்ற காந்தக் கலவையின் கூட்டே காற்று என்ற மூலகம். இது பஞ்ச பூதங்களில் ஒன்று எனக்கண்டோம். இதனை ஒளவை பாடலில் “நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்று உலவை இரண்டு, ஒன்று விண்” - என கூறியுள்ளார். உலவை என்பது காற்று, இரண்டு அணுச்செல்களால்லான பூதத் தத்துவம் காற்று என திறம்பட இயம்பியுள்ளார்.

1. பஞ்சபூதங்கள் : விண், காற்று, தீ, நீர், நிலம்.
2. ஆறுசுவைகள் : இனிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு
3. மூன்று தத்துவங்கள் : வாதம், பித்தம், சிலேத்துமம்
4. உடலின் ராஜ உறுப்புகள்: 1.இருதயம்,2.நுரையீரல்கள், 3. கல்லீரல், 4. மண்ணீரல்,5. சிறு நீரகங்கள்
5. சுவாச உறுப்புகள் : புறஉறுப்பு மூக்கு, அக உறப்பு நுரையிரல்கள்
6. பிராணனின் வெறுபெயர்கள்: 1 காற்று (வெளியில்),  2. மூச்சு (அ) சுவாசக்காற்று 3. வளி, 4. நாடி, 5. வாசி, 6. வாயு, 7. வர்மம் 8. உலவை
எனப்பல பெயர்களில் சித்தர்கள் தம் பரிபாசையில் குறிப்பிட்டுள்ளார்கள்.