கபாலபதி

செயல்முறை

1. முதலில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. மூல பந்தம் செய்து கொள்ளவும்.
3. இருமூக்கு துவாரங்கள் வழியாக மூச்சைச் சாதராணமாக உள்ளே இழுக்கவேண்டும். மூச்சை வெளியே தள்ளும் போது மிக வேகமாகத் தள்ள வேண்டும்.
4. மூச்சை வெளித்தள்ளும் போது மணிப்பூரக சக்கரம், சுவாதிட்டாண சக்கரம் மற்றும் மூலாதாரச்சக்கரத்தில் தேவையான வேகத்தைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது வயிற்றுப் பகுதியானது மேல் நோக்கி வேகமாகச் செல்லும்.
5. இந்த கபாலபதியை 6 முதல் 21 சுற்றுக்கள் வரை செய்யலாம்.

நன்மைகள்

1. நுரையீரல், மூச்சுக்குழாய்கள் சுத்தப் படுத்தப்படுகிறது.
2. மூச்சுத்தொல்லை, ஆஸ்துமா போன்ற அனைத்து நோய்களும் நீங்குகிறது.
3. மூளைச் செல்லிலுள்ள உயிரணுக்களை ஊக்கப்படுத்து கின்றன.
4. நரம்பு மண்டலம் முழுவதும் தூய்மையும் உறுதியும் பெறுகிறது.